ஜெர்மனி மக்களுக்கு காத்திருக்கும் நெருக்கடி – அதிகரிக்கும் விலைகள்
ஜெர்மனியில் எரிபொருட்களின் விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் மக்கள் வாழ்கை செலவுகளை ஈடு செய்வதற்கு மிகவும் சிரமபடுவதாக தெரியவந்துள்ளது.
மேலும் இந்த விலையேற்றம் காரணமாக பலர் சட்ட விரோதமான முறையில் காடு அழிப்பு நடவடிக்கையிகளில் ஈடுப்பட்டு வருவதாக ஜெர்மனியின் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக எரிப்பொருட்களின் விலையேற்றம் காரணத்தினால் மக்கள் இவ்வாறான சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக எஸன், பேர்ளின், பயண், ரைலான்ஃராக்ஸ் மாநிலம் போன்ற மாநிலங்களில் இவ்வாறான காடு அழிப்புக்கள் அதிகரித்து காணப்படுகின்றது.
இந்நிலையில் ரைலான்ஃராக்ஸ் மாநிலத்தில் 2018 ஆம் ஆண்டுக்கு மட்டும் 18 இவ்வகையான சட்டவிரோதமான வழக்குகள் காணப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இந்த தொகையானது 118 ஆக அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.