ஜெர்மனி மக்களுக்கு காத்திருக்கும் நெருக்கடி – அடுத்த ஆண்டு அதிகரிக்கும் கட்டணம்
ஜெர்மனியில் எரிபொருட்களின் விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்படும் என்று தெரியவந்துள்ளது.
அதாவது 2024 ஆம் ஆண்டு முதல் பெற்றோல் மற்றும் டீசல் போன்றவற்றின் Co2 என்று சொல்லப்படுகின்ற கரியமல வாயுக்குரிய விலையானது உயர்த்தப்பட்டு இருக்கின்றது.
அதாவது தற்பொழுது புரோட்டன் ஒரு டொன் கரியமல வாயுவுடைய வரியாக 30 யுரோக்கள் அறவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு 1 டொன் கரியமல வாயுக்கு 40 யுரோக்கள் அறவிடப்படும் என்று தெரியவந்துள்ளது.
இதன் அடிப்படையில் 2024 ஆம் ஆண்டு பெற்றோலின் விலை 10 சென்டால் அதிகரிக்கப்படும் என்றும், டீசலுடைய விலை 11 சென்டால் அதிகரிக்கப்படும் என்றும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் 2025 ஆம் ஆண்டு பெற்றோலின் விலை 11 சென்ட் ஆக அதிகரிக்கப்படும் என்றும், டீசலுடைய விலை 12 சென்ட் ஆக அதிகரிக்கப்படும் என்றும் தெரியவந்துள்ளது.
(Visited 6 times, 1 visits today)