சீனாவில் வித்தியாசமான முறையில் போனஸ் வழங்கிய நிறுவனம் : எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லுங்கள் என அறிவிப்பு!
ஒரு சீன கிரேன் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ஆண்டு இறுதி போனஸாக 11 மில்லியன் டாலர்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் இதற்கு ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது மேசையின்மீது பணத்தை கொட்டியுள்ள நிறுவனம் ஊழியர்களிடம் உங்களால் எவ்வளவு முடியுமோ அவற்றை வீட்டிற்கு எடுத்து செல்லுங்கள் எனக் கூறியுள்ளது.
ஒரு ஊழியர் 100,000 யுவான்களை வசூலித்ததாகக் கூறப்படுகிறது, இது ஒதுக்கப்பட்ட நேரத்தில் தோராயமாக ரூ.12.07 லட்சம் ஆகும்.





