பிரான்ஸில் சுப்பர் மார்க்கெட் ஒன்றின் முன்பாக ஏற்பட்ட பரபரப்பு

பிரான்ஸில் சுப்பர் மார்க்கெட் ஒன்றின் முன்பாக இடம்பெற்ற வாள் வெட்டு தாக்குதலில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
45 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸின் தெற்கு பகுதியில் உள்ள நகரில் இச்சம்பவம் சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
அங்குள்ள Super U அங்காடியில் இருந்து குறித்த 45 வயதுடைய நபர் வெளியேறிய போது, வெளியே காத்திருந்த ஆயுததாரி ஒருவர், வாள் போன்ற கூரிய ஆயுதத்தினால் அவரை தாக்கியுள்ளார்.
பல தடவைகள் வெட்டப்பட்டதில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார். அவருடைய மனைவி சம்பவத்தின் போது அருகில் இருந்துள்ளார்
அவர் தாக்கப்படவில்லை. மிகுந்த அதிர்ச்சியடைந்த நிலையில் அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
(Visited 12 times, 1 visits today)