ஜப்பானில் 356 பயணிகளுடன் பயணித்த விமானத்தில் ஏற்பட்ட பரபரப்பு

ஜப்பானின் ஒக்கினாவா பகுதியில் இருந்து புறப்பட்ட விமானத்தில் சில நிமிடங்களிலேயே புகை வெளியேறியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
விமானத்தில் இருந்த பயணிகள், ஒரு இருக்கை பகுதியில் இருந்து எரியும் வாசனை மற்றும் புகை வந்ததாக தெரிவித்தனர். உடனடியாக விமான ஊழியர்கள் சூழ்நிலையை கட்டுப்படுத்த முயற்சி எடுத்தனர்.
அந்த இருக்கையின் கீழ் Power Bank வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அது அதிக வெப்பம் எடுத்து புகையை ஏற்படுத்தியதாக நம்பப்படுகிறது.
அந்த நேரத்தில் பக்கத்து இருக்கையில் இருந்த பயணி ஒருவர் தன்னிடம் இருந்த தண்ணீரை சாதனத்தின் மீது ஊற்றி புகையை நிறுத்த முயற்சித்துள்ளார்.
பின்னர் அந்த சாதனத்தால் ஆபத்து இல்லை என உறுதி செய்யப்பட்ட நிலையில், விமானப் பயணத்தை தொடர்ந்துள்ளது.
356 பயணிகளுடன் விமானம் டோக்கியோவில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
இந்த சம்பவத்தின் பின்னணியில், ஜப்பான் விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள், Power Bank சாதனங்களை பயணிகள் கையோடு வைத்திருக்கும்படி எச்சரிக்கைகள் வழங்கி வருகின்றன.