லெபனானில் முதல் முறையாக குறிவைக்கப்பட்ட நகரம் : 30 பேர் உயிரிழப்பு!
லெபனானின் பர்ஜா நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டடத்தின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
குறித்த தாக்குதல் முன் எச்சரிக்கை எதுவும் இன்றி நடத்தப்பட்டதாக கூறப்படுவதுடன், இது தொடர்பில் இஸ்ரேல் எவ்வித அறிக்கையும் வெளியிடவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய லெபனானில் உள்ள துறைமுக நகரமான சிடானுக்கு வடக்கே உள்ள பார்ஜா என்ற நகரம், மோதலில் இதுவரை தொடர்ந்து குறிவைக்கப்படவில்லை. தற்போது முதல் முறையாக குறிவைக்கப்பட்டுள்ளது.
(Visited 44 times, 1 visits today)





