ஐரோப்பா

துருக்கியில் புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்ட குழந்தை – திருவிழா போன்று கொண்டாடிய மக்கள்

துருக்கியில், லியூகேமியா என்றழைக்கப்படும் ஒருவகை ரத்த புற்றுநோயிலிருந்து மூன்று வயது குழந்தை மீண்டுள்ளது.

இதனை கொண்டாடும் விதமாக ஆயிரக்கணக்கானோர் வானில் பலூன்களை பறக்கவிட்ட சம்பவம் நெகிழ வைத்துள்ளது.

அலி ஆசப் 8 மாத குழந்தையாக இருந்தபோது லியூகேமியா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டு, எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை உட்பட பல்வேறு சிகிச்சைகளை 2 ஆண்டுகளாக மேற்கொண்டுவந்ததாக கூறப்படுகிறது.

மகன் முழுமையாக குணமடைந்ததை கொண்டாட வருமாறு தந்தை சமூக வலைதளத்தில் அழைப்பு விடுத்திருந்த நிலையில், நகராட்சி நிர்வாகம் சார்பில் பலூன் விடும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!