அமெரிக்க பல்கலைக்கழகத்தில் கௌரவ பட்டம் பெற்ற பூனை!

அமெரிக்காவில் Vermont பல்கலைக்கழகத்தில் பூனை ஒன்று கௌரவ பட்டம் பெற்றுள்ளது.
Max எனும் பூனைக்கே கௌரவப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. Max அதன் உரிமையாளரின் குடும்பத்துடன் பல்கலைக்கழகத்துக்குச் செல்லும் வீதியில் வசிக்கிறது.
தினமும் அது பல்கலைக்கழகத்தின் வளாகத்துக்குச் சென்று மாணவர்களுடன் பொழுதைக் கழிக்கும் என்று பல்கலைக்கழகம் அதன் Facebook பக்கத்தில் தெரிவித்தது.
சுமார் 4 ஆண்டுகளாகப் பல்கலைக்கழகத்தில் தனது நேரத்தைச் செலவிடும் Max மாணவர்களிடையே பிரபலமானது.
அதைக் காணும்போதெல்லாம் அதனுடன் படம் பிடித்துக்கொள்வது மாணவர்களுக்குப் பிடித்த பொழுதுபோக்காகியுள்ளது.
பல்கலைக்கழகத்தில் சேர விரும்பும் மாணவர்கள் சுற்றிப்பார்க்கும்போது அவர்களுடன் Max இணைந்துக் கொள்ளும்.
Maxக்கு எப்படி மாணவர்களுடன் போகத் தெரியும் என்பது தெரியவில்லை என்று உரிமையாளர் கூறினார்.