குற்றச்செயல்களை கட்டுப்படுத்த அதிரடி படையினருக்கு அழைப்பு!

கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் மற்றும் பாதாள உலகச் செயற்பாடுகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் இருந்தும் பல துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனவே தென் மாகாணம் மற்றும் மேல் மாகாணத்தில் பாதாள உலக செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் விசேட கவனம் செலுத்தியுள்ளனர்.
இதற்காக 600 பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அடங்கிய குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
(Visited 10 times, 1 visits today)