மத்தியதரைக் கடலில் மூழ்கிய படகு : 60 பேர் உயிரிழப்பு!
மத்தியதரைக் கடலில் பயணித்த குடியேற்றப் படகு ஒன்று மூழ்கியதால் 60 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
லிபியாவில் இருந்து ஐரோப்பா நோக்கி பயணித்த சட்டவிரோத அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பலே மேற்படி விபத்தில் சிக்கியுள்ளது.
அந்தக் கப்பல் இத்தாலி அல்லது மால்டாவை நோக்கிச் சென்று கொண்டிருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் 25 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
இத்தாலிய கடலோர காவல்படையின் உதவியுடன் தன்னார்வ நிவாரண சேவை குழுக்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டன.
மத்தியதரைக் கடல், சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்கு உலகின் மிக ஆபத்தான கடல் பாதையாகக் கருதப்படுகிறது.
ஐக்கிய நாடுகளின் அகதிகள் அமைப்பின் கூற்றுப்படி, சுமார் 2,500 சட்டவிரோத குடியேற்றவாசிகள் ஐரோப்பாவை அடைய முயன்று காணாமல் போகின்றனர் அல்லது இறக்கின்றனர்.
(Visited 15 times, 1 visits today)