பொழுதுபோக்கு

இந்தியன் – 2 உடன் மோத இருக்கும் சூப்பர் ஹிட் படத்தின் 2ஆம் பாகம்..

உலகநாயகன் கமலஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் தொழில்நுட்ப வேலைகளுக்காக தற்போது படக் குழு அமெரிக்காவில் தஞ்சமாகி இருக்கிறது. கமலஹாசன் இந்த படத்திற்காக கடும் உழைப்பை போட்டு வருகிறார்.

கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக இந்தியன் 2 படத்தின் வேலைகள் ரொம்பவும் தடுமாற்றத்துடனே நடந்து கொண்டு இருந்தது. இந்த பட ரிலீஸ் என்பது கமலின் மிகப்பெரிய கனவு என்று கூட சொல்லலாம்.

ஏற்கனவே இந்தியன் 2 அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை அப்படியே ஏப்ரல் மாதத்திற்கு மாற்றினார்கள். இதற்கு மிக முக்கிய காரணம் சூர்யாவின் கங்குவா மற்றும் தனுஷ் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் கேப்டன் மில்லர் போன்ற படங்கள் பொங்கல் சமயத்தில் ரிலீஸ் ஆக இருப்பதால்தான்.

இப்படி எந்த போட்டியும் இல்லாமல் இந்தியன் 2 படத்தை இறக்கி வெற்றி காண வேண்டும் என்பதுதான் கமலின் பிளானாக இருந்தது. தற்போது இந்த பிளானை ஒட்டுமொத்தமாக சொதப்பும் விதமாக ஒரு மிகப்பெரிய ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் அதே ஏப்ரல் மாதத்தை குறிவைத்து களமிறக்க பட குழுவால் திட்டமிடப்பட்டிருக்கிறது.

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் போன்றவர்களின் சிறந்த நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் தான் புஷ்பா. பான் இந்தியா மூவியாக ரிலீஸ் ஆன இந்த படம் தெலுங்கு சினிமா மட்டும் இல்லாமல் ஒட்டு மொத்த இந்திய சினிமாவிலும் பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிக்கொண்டிருக்கிறது.

இந்த படத்திற்கான 40 சதவீத வேலைகள் முடிந்து விட்டதாம். எனவே படம் வரும் ஏப்ரல் மாதம் 2024 ஆம் ஆண்டு ரிலீசை எதிர் நோக்கி உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த படம் அப்படி ஏப்ரலில் ரிலீஸ் ஆனால் கண்டிப்பாக கமலுக்கு போட்டியாக அமைந்து விடும். இதை முன்னரே அறிந்து எந்த படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றப் போகிறார்கள் என இனிவரும் நாட்களில் தான் தெரியும்.

(Visited 5 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content