ஐரோப்பிய நாடொன்றில் அமுலுக்கு வரும் தடை
நெதர்லாந்தில் வகுப்பறைகளில் கையடக்க தொலைபேசிகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஸ்மார்ட் கைக்கடிகாரம், உள்ளிட்ட எண்மயக்கருவிகளின் பயன்பாட்டிற்கு தடைவிதிக்கப்படும் என நெதர்லாந்தின் கல்வி அமைச்சர் Robbert Dijkgraaf தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்களின் கவனச்சிதறல் காரணமாகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மருத்துவ காரணங்கள் மற்றும் விசேட தேவையுடையவர்களுக்கு மாத்திரம் கையடக்க தொலைபேசி உள்ளிட்ட எண்மயக்கருவிகளை பயன்படுத்த அனுமதிக்கப்படும் எனவும் நெதர்லாந்தின் கல்வி அமைச்சர் Robbert Dijkgraaf அறிவித்துள்ளார்.
(Visited 20 times, 1 visits today)