இலங்கையில் மர்மமான முறையில் உயிரிழந்த 09 வயது சிறுமி!
இலங்கையில் 09 வயதுடைய சிறுமியொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹலவத்த, இரணைவில பிரதேசத்தை சேர்ந்த 9 வயதுடைய ஷலனி ரிதுஷா என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.
சிறுமியின் சடலத்தை பக்கத்துவீட்டு பெண், பார்ததாகவும், பின்னர் குறித்த சிறுமியின் தந்தைக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஷாலனியின் தாயார் பொருளாதார நெருக்கடியால், சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு குவைத் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
ஹலவத்த, இரணைவில பிரதேசத்தில் இருந்து பதிவாகிய சிறுமியின் மரணம் தொடர்பில் முதற்கட்ட நீதவான் விசாரணையும் சட்ட வைத்திய அதிகாரியின் விசாரணையும் இன்று (12.08) காலை இடம்பெற்றது.
இதேவேளை, இது கொலையா அல்லது தற்கொலையா என மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
(Visited 11 times, 1 visits today)





