ஆஸ்திரேலியாவில் 7 மாத குழந்தையை கொலை செய்த 30 வயது நபர்?
ஆஸ்திரேலியாவில் அடிலெய்டில் வசித்த 17 மாத குழந்தையை கொலை செய்ததாக 30 வயது நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த குழந்தை தலையில் பலத்த காயங்களுடன் கடந்த மாதம் 7ம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
2 நாட்களுக்குப் பிறகு குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
சந்தேகநபருக்கு பிணை வழங்க மறுக்கப்பட்டுள்ளதுடன், இன்று அடிலெய்ட் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
அங்கு கொலை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும்.





