பிரான்ஸில் 14 வயது மாணவரின் வெறிச் செயல் – உயிருக்கு போராடும் ஆசிரியர்!
பிரான்ஸின் சனரி-சுர்-மெரில் (Sanary-sur-Mer) உள்ள ஒரு பாடசாலையில் 60 வயதுடைய ஆசிரியர் ஒருவர் மாணவரால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
14 வயதான குறித்த மாணவர் ஆசிரியரை பலமுறை கத்தியால் குத்தி காயப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆசிரியரின் உடலில் 03 அல்லது 04 கத்திக் குத்து காயங்கள் இருந்ததாக உள்ளூர் வழக்கறிஞர் ரபேல் பாலண்ட் (Raphael Balland) தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தாக்குதல்தாரியான மாணவர் கொலைமுயற்சி குற்றச்சாட்டின் கீழ் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் நபருக்கு முன்னர் எந்த குற்றப் பதிவும் இல்லை என்றும் மத அல்லது அரசியல் நோக்கம் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் மேற்படி தாக்குதல் சம்பவம் பிரஞ்சு பாடசாலைகளில் உள்ள பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது.




