கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய 12 அடி நீளமுடைய மலைப்பாம்பு மீட்பு!
பாணந்துறை – வடக்கு பாணந்துறை, கோரகபால பிரதேசத்தில் வீடொன்றின் வாகனத் தரிப்பிடத்தில் இருந்து 12 அடி நீளமுடைய மலைப்பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாணந்துறை வடக்கு பொலிஸாரால் பிடிக்கப்பட்டு பொல்கொட வனப்பகுதியில் அந்த பாம்பு விடப்பட்டுள்ளது.
வீடொன்றின் வாகனத் தரிப்பிடத்தில் மலைப்பாம்பு ஒன்று இருப்பதாக பிரதேச மக்கள் பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மலைப்பாம்பை பாதுகாப்பாகப் பிடித்துள்ளனர்.
பின்னர், பிரதேச மக்களும் பொலிஸாரும் இணைந்து தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையின் அதிகாரிகள் மற்றும் அட்டிய வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயன்றனர்.
உரிய அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியாத காரணத்தினால் பாணந்துறை வடக்கு பொலிஸார் இந்த மலைப்பாம்பை பொல்கொட வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.