இலங்கையில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயானது இலங்கையில் இரண்டாவது மிகவும் பொதுவான புற்றுநோயாக இருப்பதாக கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது
இதன்படி, வருடாந்தம் பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கை சுமார் 1407 என கணக்கிடப்பட்டுள்ளதுடன், கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வருடத்திற்கு 780 பேர் மாத்திரமே என தெரியவந்துள்ளது.
இங்குள்ள ஆபத்தான நிலைமை என்னவென்றால், இந்த நோய்கள் பரவுவதை அலட்சியப்படுத்தினால், இந்த நாட்டில் 2070 இல் 58,754 இறப்புகளும் 2120 இல் 115,137 இறப்புகளும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்டத்தை இலக்காகக் கொண்டு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறிந்து ஒழிக்கும் கணக்கெடுப்பின் முதலாவது முன்னோடித் திட்டம் களுத்துறை மாவட்டத்தில் 35 முதல் 45 வயதுக்குட்பட்ட பெண்கள் பங்கேற்றுள்ளனர்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலக்குகள் மற்றும் நோக்கங்கள் மற்றும் களுத்துறையில் நடத்தப்பட்ட திட்டத்தின் முக்கிய கண்டுபிடிப்புகளின்படி, 35 மற்றும் 45 வயதுக்குட்பட்ட திருமணமான பெண்களுக்கான மிகவும் பயனுள்ள மற்றும் வெற்றிகரமான சோதனைகள் தொடர்பாக சுகாதார பணியகத்தால் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
உலக சுகாதார நிறுவனம் 5 முதல் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழக்கமான முதன்மை ஸ்கிரீனிங் சோதனைகளை மேற்கொள்வதன் மூலம் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை ஒழிக்க முடியும் என்று பரிந்துரைத்துள்ளது.
நாடெங்கிலும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான அணுகுமுறைகளை விரிவுபடுத்துவதற்கும் அதற்கான வசதிகளை வழங்குவதற்கும் நாடு முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை முன்னெடுப்பதற்கு தேவையான வசதிகளை வழங்குவதற்கும் ரோட்டரி கழகம் தனது கரங்களை நீட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.