இலங்கையில் உள்ள தொழிற்சங்கங்களுக்கு நீதவான் பிறப்பித்த உத்தரவு!
10 தொழிற்சங்கங்கள் போராட்டங்கள் நடத்தும்போது பல இடங்களுக்குள் நுழைய தடை விதித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (21.02) உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்படி, நிதியமைச்சு, ஜனாதிபதி செயலகம், மத்திய வங்கி மற்றும் ஜனாதிபதி மாளிகை ஆகியவற்றிற்குள் நுழைய முடியாதவாறு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்களுக்கு எந்த விதமான இடையூறும் ஏற்படவோ, போக்குவரத்து நெரிசலோ ஏற்படக் கூடாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
(Visited 22 times, 1 visits today)





