வட அமெரிக்கா

ரொறன்ரோவில் பொலிஸாருக்கு எதிராக பதியப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்

ரொறன்ரோவில் பொலிஸாருக்கு எதிராக அதிகளவில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 26 மாத காலப் பகுதியில் பொலிஸ் வாகனங்களுக்கு எதிராக ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.அதிக வேகமாக வாகனத்தை செலுத்தியமை தொடர்பிலே இந்த அனைத்து முறைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

நகரின் முக்கிய இடங்களில் காணப்படும் கமராக்களின் ஊடாக தானியங்கி அடிப்படையில் இந்த முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.ரொறன்ரோ பொலிஸ் சேவைக்கு சொந்தமான வாகனங்கள் தொடர்பில் இவ்வாறான பல முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

How Automated Speed Enforcement Cameras Work - News

பொலிஸ் ரோந்து வாகனங்கள், சிறைச்சாலை வாகனங்கள், கைதிகள் வாகனங்கள், வாகனத் தரிப்பு குறித்து நடவடிக்கை எடுக்கும் வாகனங்கள் உள்ளிட்ட பல வாகனங்களும் குறித்த வேகக் கட்டுப்பாட்டை விடவும் அதிகளவு வேகமாக பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பாடசாலை வீதியில் பாடசாலை விடும் நேரத்தில், மணிக்கு 59 கிலோ மீற்றர் வேகத்தில் பொலிஸ் வாகனமொன்று செலுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு பொலிஸ் வாகனங்கள் தொடர்பில் தானியங்கி அடிப்படையில் கமராக்களினால் பதிவு செய்யப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.இவ்வாறு குற்றச் செயல்களுக்காக விதிக்கப்படும் அபராதத்தை பொலிஸ் பிரிவு முதலில் செலுத்தும் எனவும் பின்னர் அந்த தொகை உரிய அதிகாரிகளிடம் அறவீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

(Visited 16 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!