இலங்கை செய்தி

இலங்கைப் பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதை முற்றாக நிறுத்த திட்டம்!

இலங்கைப் பெண்களை பணிப் பெண்களாக வெளிநாடுகளுக்கு அனுப்புவதை முற்றாக நிறுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் அங்கீகாரம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் அமைப்புகளுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பெண்களை வீட்டுப்பணிப் பெண்களாக அனுப்புவதை நிறுத்திவிட்டு அதிக சம்பளம் பெரும் தொழில்களுக்கு பயிற்சிகளை வழங்கி அனுப்ப வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார்.

அனுமதி பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் சங்கத்துடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் போது பத்து வருடங்களுக்குள் வீட்டுப் பணிப்பெண்களை வெளிநாட்டு வேலைகளுக்கு செல்வதை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான பிரேரணையை தன்னிடம் சமர்ப்பிக்க வேண்டுமென துறைசார்ந்த சகல தரப்பினருக்கும் பணிப்புரை அமைச்சர் வழங்கினார்.

(Visited 9 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை