உக்ரேனிய அமைப்புக்காக நிதி திரட்டிய இரட்டை குடியுரிமை கொண்ட ரஷ்ய பெண் கைது
உக்ரேனிய ஆயுதப் படைகளுக்குப் பயன ளிக்கும் வகையில் நிதி திரட்டியதன் மூலம் “தேசத்துரோகம்” செய்ததற்காக யூரல் மாவட்டத்தில் ரஷ்ய மற்றும் அமெரிக்க இரட்டை குடியுரிமை கொண்ட ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
“நமது நாட்டின் பாதுகாப்பிற்கு எதிரான நடவடிக்கைகளில் வெளிநாட்டு மாநிலங்களுக்கு நிதி உதவி வழங்குவதில் அவர் ஈடுபட்டுள்ளார்” என்று ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் பிப்ரவரி 2022 முதல், அவர் உக்ரேனிய அமைப்புக்காக “முன்கூட்டியே பணம் சேகரித்து வருகிறார்” என்று அறிக்கை தெரிவித்துளளது.
பிப்ரவரி 2022 இல் ரஷ்யா ஆக்கிரமித்த பின்னர் மேற்கத்திய கூட்டணியால் நிதி ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் ஆதரிக்கப்படும் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்காவில் பல பொது ஆர்ப்பாட்டங்களில் அந்தப் பெண் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.
ரஷ்யாவில் தேசத்துரோகத்திற்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.