ஜியுலியோ ரெஜெனியின் மரணம் : நான்கு எகிப்திய அதிகாரிகள் மீது இத்தாலியில் மீண்டும் விசாரணை
கரியோவில் ஒரு இத்தாலிய மாணவரை கடத்தி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நான்கு எகிப்திய பாதுகாப்பு முகவர்கள் மீதான விசாரணையை இத்தாலியில் தொடங்கியுள்ளது.
ஐக்கிய இராச்சியத்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டதாரியான கியுலியோ ரெஜெனி, ஜனவரி 2016 இல் எகிப்திய தலைநகரில் காணாமல் போனார்,
காணாமல் போன ஒரு மாதத்திற்குப் பிறகு, 28 வயது இளைஞனின் சடலம் கெய்ரோவின் விளிம்பில் நெடுஞ்சாலை ஓரத்தில் சிகரெட் தீக்காயங்கள், உடைந்த பற்கள் மற்றும் எலும்பு முறிவுகளுடன் கண்டுபிடிக்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் அவர் இறப்பதற்கு முன் சித்திரவதை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
நான்கு எகிப்திய அதிகாரிகள் கொலையில் ஈடுபட்டதாக இத்தாலிய வழக்குரைஞர்கள் நம்புகிறார்கள், ஆனால் சம்மன் அனுப்ப அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை, எனவே அவர்கள் ஆஜராகாத நிலையில் விசாரிக்கப்படுகிறார்கள்.