ஜெர்மனியில் சிறுவர்களால் இளைஞனுக்கு நேர்ந்த கதி
ஜெர்மனியில் இடம்பெற்ற சம்பவம் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மனியின் அன்மைய நாட்களாக இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரவித்துள்ளனர்.
இரண்டு 16 மற்றும் 17 வயதுடைய சிறுவர்கள் 19 வயதுடைய இளைஞர் மீது துப்பாக்கி சூட்டு சம்பவத்தை நடத்தியதாக தெரியவந்துள்ளது. இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் காயமடைந்த இளைஞரை மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டு வைத்தி உதவிகள் வழங்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஈடுப்பட்டதாக கணிக்கப்படுகின்ற இந்த 16 மற்றும் 17 வயதுடைய இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் இவ்இரு இளைஞர்களிடம் எவ்வாறு துப்பாக்கி கிடைத்தது என்றும், 19 வயதுடைய இளைஞரை ஏன் சுட்டார்கள் என்றும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.