போதைப்பொருள் கடத்தல்காரர்கள் 5 பேர் ஜோர்டான் படையினரால் சுட்டுக் கொலை
அண்டை நாடான சிரியாவில் இருந்து நாட்டிற்கு போதைப்பொருள் கொண்டு வர முயன்றதாகக் கூறப்படும் ஐந்து கடத்தல்காரர்களை ஜோர்டான் இராணுவ வீரர்கள் கொன்றுள்ளனர்.
இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்றதாக இராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் நான்கு சந்தேகத்திற்கிடமான கடத்தல்காரர்கள் காயமடைந்ததாகவும், “பெரிய அளவிலான போதைப்பொருட்கள்” கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோர்டானிய தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் எவரையும் “இரும்புமுஷ்டியால் தாக்குவதாக” அந்நாட்டு இராணுவம் சபதம் செய்துள்ளது.
கடத்தல்காரர்கள் சமீப ஆண்டுகளில் ஜோர்டானை ஒரு நடைபாதையாகப் பயன்படுத்தி, சிரியாவிலிருந்து, முக்கியமாக எண்ணெய் வளம் மிக்க அரபு வளைகுடா நாடுகளுக்கு, அதிக அடிமையாக்கும் ஆம்பெடமைன், கேப்டகனைக் கடத்துகின்றனர்.
உலகின் பெரும்பாலான கேப்டகன் சிரியாவில் தயாரிக்கப்பட்டது.
போதைப்பொருள் கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கான வழிகளைப் பற்றி விவாதிக்க சிரியா, ஈராக், லெபனான் மற்றும் ஜோர்டானின் உள்துறை அமைச்சர்களின் கூட்டத்தை ஜோர்டான் சனிக்கிழமை நடத்தியது.
அத்தகைய சட்டவிரோத வணிகங்கள் பற்றிய தகவல்களைப் பரிமாறிக் கொள்ள ஒரு கூட்டு தொலைத்தொடர்புக் குழுவை அமைக்கவும் ஒப்புக்கொண்டது.