கொழும்பு – வெல்லவாய பிரதான வீதியில் ஒன்றுத் திரண்ட மக்கள்!
பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக கொழும்பு – வெல்லவாய பிரதான வீதி முற்றாக தடைப்பட்டுள்ளது.
வெல்லவாய வெஹெரய பிரதேசத்தில் நிலவும் காட்டுயானை பிரச்சினைக்கு தீர்வைக் கோரி வெல்லவாய தனமல்வில பிரதான வீதி வெல்லவாய வெஹெரய பிரதேசத்தில் இருந்து முற்றாக தடை செய்யப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதனால் பல கிலோமீற்றர் தூரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.
(Visited 12 times, 1 visits today)





