இலங்கையில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி நிதி மோசடிகளில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
கம்பஹாவில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி நிதி மோசடிகளில் ஈடுப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் கணினி குற்றப்பிரிவினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் பல்வேறு தரப்பினரிடம் இவ்வாறு நிதி மோசடியில் ஈடுபட்டதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.
அதற்கமைய கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
சந்தேகநபர்கள் கம்பஹா – வேபட பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
சந்தேகநபர்களிடம் இருந்த தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம், தொலைபேசி என்பன குற்றவியல் விசாரணை திணைக்களத்தினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.
(Visited 14 times, 1 visits today)