அமெரிக்காவின் முடிவை உற்று நோக்கும் உலக நாடுகள் : டேவிட் கேமரூன் அழைப்பு
பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் டேவிட் கேமரூன் அமெரிக்க காங்கிரஸுக்கு உக்ரைனுக்கான நீண்டகால இராணுவப் பொதியை அனுப்புமாறு புதிய அழைப்பு விடுத்துள்ளார்.
போலந்துக்கு விஜயம் செய்த போது, மேற்கத்திய நாடுகள் “நம்பகமான நட்பு நாடுகளா” என்பதை அறிய “உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு நாடும்” அமெரிக்காவின் முடிவைப் பார்த்துக் கொண்டிருக்கும் என்று கேமரூன் கூறியுள்ளார்.
போலந்து பயணத்தை தொடர்ந்து கேமரூன் ஜெர்மனியில் நடைபெறும் மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
“இது அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கும் தனிப்பட்ட முறையில் சபாநாயகர் மைக் ஜான்சனுக்கும் உக்ரைன் உதவிப் பொதியை வாக்கெடுப்புக்கு சமர்ப்பிக்குமாறு நாங்கள் செய்யும் கூட்டு வேண்டுகோள்,” என்று சிகோர்ஸ்கி கேமரூனுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
உலகெங்கிலும் உள்ள அமெரிக்க நம்பகத்தன்மையில் தாக்கத்தை ஏற்படுத்தும் “சகாப்தத்தை உருவாக்கும் முடிவு” என்று அவர் அழைத்தார்.