சிங்கப்பூர் செல்லும் அனைத்து வெளிநாட்டுப் பயணிகளுக்கும் முக்கிய தகவல்
சிங்கப்பூர் நாட்டிற்கு செல்லும் அனைத்து வெளிநாட்டுப் பயணிகளுக்கும் குடிநுழைவு முறை இனி Automated lanes என்னும் தானியங்கு முறையில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் நடப்புக்கு வரும் இந்த நடவடிக்கை அனைத்து நாட்டு பயணிகளுக்கும் பொருந்தும் என சொல்லப்பட்டுள்ளது.
இந்த தானியங்கி பாதை குடிநுழைவு முறை விமானம், தரை மற்றும் கடல் வழியே உள்ளே வரும் பயணிகளுக்கு பொருந்தும். அதாவது பயணிகள் சிங்கப்பூர் வருவதற்கு முன்னரே முன்பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் இதைச் செய்ய முடியும்.
அதே போல, சிங்கப்பூரை விட்டு வெளியேறும்போது பயணிகள் தங்கள் பாஸ்போர்ட்டை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமும் இனி இருக்காது. இந்த நடைமுறையை உலகிலேயே சிங்கப்பூர் தான் முதலில் நடப்புக்கு கொண்டுவர உள்ளது.
அடுத்த தலைமுறை தானியங்கு எல்லைக் கட்டுப்பாட்டு அமைப்பு இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் நடப்புக்கு வரும் என்று குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்தது.
தற்போதுள்ள பாதைகளை படிப்படியாக மாற்றப்பட்டு புதிய தானியங்கி பாதைகள் அமைக்கப்படும் என்று ICA தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 160 க்கும் மேற்பட்ட தானியங்கி பாதைகள் நிறுவப்பட்டன, இந்த ஆண்டில் 230 பாதைகள் அமைக்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது.