இலங்கை : சிறு குழந்தைகளுக்காக ஜனாதிபதியின் நிதியத்தில் இருந்து மில்லியன் கணக்கில் ஒதுக்கீடு!
சிறு குழந்தைகளின் கல்லீரல் மாற்று சத்திரசிகிச்சை மற்றும் கோக்லியர் மாற்று சத்திரசிகிச்சைகளுக்கு ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதியுதவி வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
வறிய பெற்றோருக்கு நிவாரணம் வழங்குதல் மற்றும் நாட்டின் எதிர்காலமாக விளங்கும் பிள்ளைகளின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, ராகம போதனா வைத்தியசாலையில் சிறு குழந்தைகளின் கல்லீரல் மாற்று சத்திரசிகிச்சைக்கான முன் மற்றும் பின் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்கு அதிக செலவினங்களை கருத்தில் கொண்டு, ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதியுதவி வழங்கப்படவுள்ளது. அதிகபட்சம் ஒரு மில்லியன் ரூபாய் வழங்கப்படவுள்ளது.
இதேவேளை நாட்டில் வருடாந்தம் 200க்கும் அதிகமான கொக்லியர் இம்பிளான்ட் சத்திரசிகிச்சை தேவைப்படும் குழந்தைகள் பிறப்பதாக மருத்துவ பரிசோதனைகள் மூலம் தெரியவந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.