நீர்கொழும்பு துப்பாக்கிச் சூடு – குற்றவாளியின் மோட்டார் சைக்கிள் மீட்பு

அண்மையில் நீர்கொழும்பு கல்கந்தவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிள் சீதுவ பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் ஹெல்மெட் மற்றும் ஜாக்கெட்டுடன் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிப்ரவரி 10ம் திகதி நீர்கொழும்பு கல்கந்த சந்தியில் இனந்தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் ஒருவரை சுட்டுக் கொன்றனர்.
உயிரிழந்த 60 வயதுடைய நபர் கிரணாவில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்ட நிலையில், துப்பாக்கிச் சூட்டுக்கு 9mm துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
(Visited 11 times, 1 visits today)