இலங்கை

புத்தளத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி பொலிஸ் கான்ஸ்டபிள் பலி!

புத்தளம், – பல்லம, நந்திமித்ர பாடசாலைக்கு அருகில் நேற்று (10) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ரிதிபென்திஎல்ல , 2 ஆம் கட்டை பகுதியை சேர்ந்த 22 வயதுடைய சிலாபம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற நேற்று (10) சிலாபம் பகுதியில் இருந்து ஆனமடுவ பகுதியை நோக்கிப் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரமொன்றில் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளை அங்கிருந்தவர்கள் உடனடியாக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து சம்பவம் தொடர்பில் பல்லம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!