ஜனாதிபதி ரணிலுக்கும் மஹிந்த கட்சிக்கும் இடையில் மோதல்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணக்கப்பாடு எட்டப்படவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கட்சியுடன் தனித்தனியாக கலந்துரையாடுமாறு ஜனாதிபதி கோரிய போதிலும், அதற்கான திகதியை ஜனாதிபதி இதுவரை வழங்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் கட்சி இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது நிபந்தனைகளுக்கு இணங்கும் ஒருவருக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சில தினங்களுக்கு முன்னர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, மக்களுடன் கலந்துரையாடல் நடத்துவதாக கூறி அனைத்து கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டமை தொடர்பில் பொதுஜன பெரமுன கட்சிக்குள் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் கூட்டத்திற்கு பிரசன்ன குழுவை அழைத்துச் சென்று கட்சியின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ஷவிடம் நேரடியாக அனுமதி பெற்றதாக கூறப்படுகிறது.