பொழுதுபோக்கு

“விஜய்யுடன் போட்டி நான் என்ன லூசா” வைரலாகும் உதயநிதியின் பதிவு

விஜய் அரசியல் கட்சி தொடங்கியது இப்போது உள்ள அரசியல் கட்சிகள் இடையே பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சரியான நேரத்தில் தமிழக வெற்றி கட்சி என்று விஜய் அரசியலில் களம் இறங்கி உள்ளது பலராலும் வரவேற்கப்பட்டு வருகிறது.

இது குறித்து உதயநிதி இடம் கேட்கும் போதும் விஜய் அரசியலில் வந்ததற்கு தன்னுடைய பாராட்டுக்கள் என்று கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் 13 வருடங்களுக்கு முன்பு, விஜய் அண்ணா கூட போட்டி போட நான் என்ன லூசா என்று உதயநிதி போட்ட பதிவு இப்போது வைரலாகி கொண்டு இருக்கிறது.

அதாவது உதயநிதி சினிமாவில் நுழைந்த புதிதில் காமெடி படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். அதுவும் சந்தானத்துடன் அவர் நடிக்கும் படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

அப்போது விஜய் படத்துடன் உங்கள் படம் போட்டியிடுமா என்று கேட்டதற்கு உதயநிதி தனது எக்ஸ் தளத்தில் இதுபோன்று பதிவு போட்டிருந்தார். ஆனால் அந்த பதிவை இப்போது அரசியலில் விஜய் இறங்கியவுடன் இதை வைத்து உதயநிதியை ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

விஜய் அரசியலில் இறங்கி உள்ளதால் அவருடன் தேர்தலில் போட்டி போட்டால் நீங்கள் என்ன லூசா என்று உதயநிதியை கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர். அதுவும் வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் புதிய ஆட்சியாக முதலமைச்சர் நாற்காலியில் விஜய் தான் அமர உள்ளார் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

(Visited 16 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!