பிரித்தானியாவில் சிவப்பு கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை
பிரித்தானியாவில் பழைய சிவப்பு நிற கடவுச்சீட்டையே இன்னும் பயன்படுத்தி விடுமுறைக்கு பயணம் மேற்கொள்ள தயாராகுபவர்களுக்கு கோடைகால பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மற்ற நாடுகளில் கடுமையான நுழைவு விதிகளின் காரணமாக புறப்படுவதற்கு முன் கடவுச்சீட்டை சரிபார்க்குமாறு சிவப்பு நிற கடவுச்சீட்டை கொண்ட மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பல நாடுகளில் இந்த கடவுச்சீட்டு இன்னும் ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும்.
இது “ஆறு மாத செல்லுபடியாகும் விதி” என்று அழைக்கப்படுகிறது. மேலும் பலர் ப்ரெக்சிட்டிற்கு முன்பிருந்தே பழைய சிவப்பு நிற கடவுச்சீட்டை பயன்படுத்துகின்றனர்.
VisaGuide.World தகவலுக்கமைய, 70 நாடுகள் ஆறு மாத கடவுச்சீட்டு விதியைப் பின்பற்றுகின்றன. மேலும் 41 நாடுகள் மூன்று மாத கடவுச்சீட்டு செல்லுபடியாகும் விதியைப் பயன்படுத்துகின்றன.
அதாவது குறைந்தது மூன்று மாதங்களுக்கு கடவுச்சீட்டு செல்லுபடியாகும் பட்சத்தில் பயணிகள் இந்த நாடுகளுக்குள் நுழைய முடியும்.
இன்னும் சிவப்பு கடவுச்சீட்டு இருந்தால், அது பிரெக்சிட்டிற்குப் பிறகு வழங்கப்படாது, அதன் காலாவதி திகதியைச் சரிபார்க்க வேண்டியது அவசியம்.
பிரெக்சிட்டிலிருந்து, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வரும் நாளில் கடவுச்சீட்டு 10 வயதுக்கும் குறைவானதாக இருக்க வேண்டும்.
மேலும் அதன் காலாவதித் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புறப்படும் திகதிக்கு குறைந்தது மூன்று மாதங்களுக்குப் பிறகு இருக்க வேண்டும்.
6 மாத கடவுச்சீட்டு விதியைக் கொண்ட 70 நாடுகள்:
Afghanistan, Algeria, Anguilla, Bahrain, Bhutan, Botswana, British Virgin Islands, Brunei, Cambodia, Cameroon, Cayman Islands, Central African Republic, Chad, Comoros, Curacao, Cote D’Ivoire, Ecuador, Egypt, El Salvador, Equatorial Guinea, Fiji, Gabon, Guinea Bissau, Guyana., Indonesia, Iran, Iraq, Israel, Jordan, Kenya, Kiribati, Laos, Madagascar, Malaysia, Marshall Islands, Micronesia, Myanmar, Namibia, Nicaragua, Nigeria, Oman, Palau, Papua New Guinea, Philippines, Qatar, Rwanda, Saint Lucia, Samoa, Saudi Arabia, Singapore, Solomon Islands, Somalia, Somaliland, Sri Lanka, Sudan, Suriname, Taiwan, Tanzania, Thailand, Timor-Leste, Tokelau, Tonga, Tuvalu, Uganda, United Arab Emirates, Vanuatu, Venezuela, Vietnam, Yemen, Zimbabwe
3 மாத கடவுச்சீட்டு விதியைக் கொண்ட 41 நாடுகள்:
Albania, Austria, Azerbaijan, Belarus, Belgium, Bosnia and Herzegovina, Czechia, Estonia, Finland, France, Georgia, Germany, Greece, Honduras, Iceland, Italy, Jordan, Kuwait, Latvia, Lebanon, Liechtenstein., Lithuania, Luxembourg, Malta, Moldova, Monaco, Montenegro, Nauru, Netherlands, New Zealand, North Macedonia, Norway, Panama, Poland, Portugal, Senegal, Slovakia, Slovenia, Spain, Sweden, and Switzerland.