இலங்கை செய்தி

கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் விடுதலை

யாழ்ப்பாணம் பிரதான வீதியை மறித்து கிளிநொச்சி பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியின் போது கைது செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் 05 பேர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் குறித்த 05 மாணவர்களையும் எதிர்வரும் 16ஆம் திகதி கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்காமை, ஊடக சுதந்திரத்தில் தலையிடுதல் உள்ளிட்ட பல விடயங்களை அடிப்படையாக கொண்டு இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இந்த கண்டன ஊர்வலத்தில் இலங்கைத் தமிழர் அரசு கட்சியின் புதிய தலைவர் எஸ்.சிறீதரன், நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் குழுவும் இணைந்துள்ளது.

(Visited 6 times, 1 visits today)
See also  2025 ஏப்ரல் வரை எரிபொருள் தட்டுப்பாடு இல்லை - இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர்
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content