ஜெர்மனியில் வெளிநாட்டவர்களுக்கு எதிரான கருத்தால் பாரிய சர்ச்சை
ஜெர்மனியில் கடந்த சில வாரங்களுக்கு முதல் அதிதீவிர வலது சாரி கட்சியான AFD கட்சியினர் மற்றும் ஒஸ்ரியா நாட்டினுடைய இரண்டிடேக்விவேகெம் என்று சொல்லப்படுகின்ற மேலும் வெளிநாட்டவர்களுக்கு எதிரான அமைப்பும் ஒன்று சேர்ந்து கிழக்கு ஜெர்மனியின் நகரமான போஸ்டமில் ஓர் கூட்டம் ஒன்றை நடத்தி இருந்தார்கள்.
இந்த கூட்டத்தில் ஜெர்மனியின் பிரதான எதிர் கட்சியான CDU என்று சொல்லப்படுகின்ற சில அரசியல் பிரமுகரும் கலந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் தற்பொழுது கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்களுக்கு எதிரான முறையில் ஜெர்மனியில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஆடன் நகரத்தில் 10 000க்கு மேற்பட்டவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். அதாவது அதிதீவர வெளிநாட்டவர்களுக்கு எதிரான கருத்தை கொண்ட இந்த அமைப்புக்கள் ஜெர்மனியில் உள்ள வெளிநாட்டவர்களை முற்றாக அகற்ற வேண்டும் என்ற கருத்து முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஏற்கனவே ஜெர்மனியில் பிரஜா உரிமை பெற்றவர்களையும் அதாவது வெளிநாட்டு பின்னணியை கொண்டு ஜெர்மன் நாட்டில் பிரஜா உரிமை பெற்றவர்களையும் ஜெர்மனியை விட்டு அகற்ற வேண்டும் என்ற கருத்து குறித்த கூட்டத்தின் போது ஆலோசிக்கப்பட்டுள்ளது.