சிரியாவின் இலக்குகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல்!
சிரியாவில் உள்ள இலக்குகள் மீது அமெரிக்க ராணுவம் வான்வழித் தாக்குதல்களை நடத்தத் தொடங்கியுள்ளது.
ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளமொன்றில் அண்மையில் மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டதன் அடிப்படையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு அமைப்பின் கூற்றுப்படி, கிழக்கு சிரியாவில் நடந்த தாக்குதல்களில் ஆறு ஈரானிய சார்பு போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
அக்டோபரில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கிய பின்னர் மத்திய கிழக்கில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட முதல் அமெரிக்க ராணுவ வீரர்கள் இவர்களாவர், மேலும் 40க்கும் மேற்பட்டோர் தாக்குதலில் காயமடைந்தனர்.
அமெரிக்க மற்றும் கூட்டணிப் படைகள் ஈராக், சிரியா மற்றும் ஜோர்டானில் ட்ரோன்கள், ராக்கெட்டுகள் மற்றும் குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் 165 க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.