மலேசியாவில் உள்ள தடுப்பு மையத்தில் இருந்து தப்பிய ரோஹிங்யா அகதிகள்!
100க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா குடியேற்றவாசிகள், மலேசியாவில் உள்ள தடுப்பு மையத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு வருடங்களில் இரண்டாவது முறையாக இப்படி ஒரு சம்பவம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2022 ஆம் ஆண்டில், 528 ரோஹிங்கியா அகதிகள் போராட்டம் நடத்தி வடக்கு பினாங்கு மாநிலத்தில் காவலில் இருந்து தப்பினர். நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது ஆறு பேர் கொல்லப்பட்டனர், மற்றவர்களில் பெரும்பாலோர் மீண்டும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் வியாழன் பிற்பகுதியில் பேராக் மாநிலத்தில் உள்ள ஒரு மையத்தில் இருந்து 131 கைதிகள் தப்பிச் சென்றதாக குடிவரவுத் துறை இயக்குநர் ஜெனரல் ரஸ்லின் ஜூசோ ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இதேவேளை பிற நாடுகளில் இருந்து வரும் அகதிகளுக்கு மலேசியா அகதி அந்தஸ்தை வழங்கவில்லை, ஆனால் அதில் சுமார் 180,000 அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் ஐக்கிய நாடுகளின் அகதிகள் நிறுவனத்தில் அங்கீகாரம் பெற்றுள்ளனர், இதில் 100,000க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா மற்றும் பிற மியான்மர் இனக்குழுக்களை சேர்ந்தவர்களாவர்.