அர்ஜென்டினாவை வாட்டி வதைக்கும் வெப்பம் – கடும் நெருக்கடியில் மக்கள்
அர்ஜென்ட்டினாவைக் கடும் வெப்பம் வாட்டி வதைப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
அங்கு வெப்பநிலை 40 டிகிரி செல்ஸியசை எட்டியிருக்கும் நிலையில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி இருந்தும் வெப்பத்தைச் சமாளிக்க முடியவில்லை என்று அர்ஜென்ட்டினா மக்கள் கூறுகின்றனர்.
வீட்டின் கூரையிலிருந்து வீட்டுக்குள் வெப்பம் பரவுகிறது. அதிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள மக்கள் ஆறுகளில் வெகுநேரம் மூழ்கிக் கிடக்கின்றனர்.
தென்னமெரிக்க நாடான அர்ஜென்ட்டினாவின் மக்கள் தொகை 45 மில்லியன். சோயா, சோளம், கோதுமை ஆகியவற்றை விளைவிப்பதில் அர்ஜென்ட்டினா முக்கியப் பங்காற்றுகிறது.
(Visited 9 times, 1 visits today)