மெக்சிகோவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் ஏழுபேர் பலி!
மெக்சிகோவில் உள்ள விடுதியொன்றில் மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் ஏழு வயது குழந்தை உள்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய மெக்சிகோ மாநிலத்தில் உள்ள சிறிய நகரமான கோர்டாஸரில் அமைந்துள்ள பால்மா ரிசார்ட்டில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் மூன்று ஆண்கள், மற்றும் மூன்று பெண்கள் உள்ளடங்களாக ஏழு வயது குழந்தையும் உயிரிழந்துள்ளது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை போதைப்பொருள் கும்பலின் வன்முறை குறித்த பகுதியில் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.





