ஆஸ்திரியாவில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட ஓவியம்

100 ஆண்டுகளாக தொலைந்து போனதாக நம்பப்படும் ஆஸ்திரிய ஓவியர் குஸ்டாவ் கிளிம்ட்டின் ஓவியம் ஒன்று வியன்னாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
54 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகம் பெறுமதியான “ஃபிராலின் லீசரின் உருவப்படம்”, இறுதியாக 1925 இல் பொதுவில் பார்க்கப்பட்டது.
அதன் பிறகு ஓவியத்துக்கு என்ன ஆனது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ஆனால் தற்போதைய உரிமையாளர்களின் குடும்பம் 1960 களில் இருந்து ஓவியத்தை கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இந்த உருவப்படம் ஒரு காலத்தில் வியன்னாவில் பணக்கார, யூத தொழிலதிபர்களாக இருந்த லீசர் குடும்பத்துக்கு சொந்தமாக காணப்பட்டது.
இந் நிலையில் லீசர் குடும்பத்தின் உரிமையாளர்கள் மற்றும் சட்டப்பூர்வ வாரிசுகள் சார்பாக இந்த ஓவியம் ஏப்ரல் மாதம் ஏலம் விடப்பட உள்ளது.
(Visited 10 times, 1 visits today)