30 போர் விமானங்களை அனுப்பிய சீனா : தைவான் எல்லைப்பகுதியில் அதிகரிக்கும் பதற்றம்!
தைவானை நோக்கி சீனா 30க்கும் மேற்பட்ட போர் விமானங்களையும் கடற்படைக் கப்பல்களையும் அனுப்பியதாக தீவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தாய்லாந்து தலைநகரில் மூத்த அமெரிக்க மற்றும் சீன பிரதிநிதிகள் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சீன மக்கள் விடுதலை இராணுவம் SU-30 போர் விமானங்கள் உட்பட 33 விமானங்களையும், ஆறு கடற்படைக் கப்பல்களையும் தைவானைச் சுற்றி வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் சனிக்கிழமை காலை 6 மணி வரை அனுப்பியதாக கூறப்பட்டுள்ளது.
இவற்றில், 13 போர் விமானங்கள் தைவான் ஜலசந்தியின் நடுப்பகுதியைக் கடந்து சென்றுள்ளன. இது தீவுக்கும் நிலப்பகுதிக்கும் இடையே ஒரு இடையகமாக கருதப்படும் அதிகாரப்பூர்வமற்ற எல்லைப் பகுதியாகும்.
தைவான் நிலைமையை கண்காணித்து, நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் தனது சொந்த படைகளை பயன்படுத்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.