சனத் நிஷாந்தவி பூதவுடல் அவரது இல்லத்தில் : ஞாயிற்றுக்கிழமை இறுதிச் சடங்கு
விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பூதவுடல் அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
புத்தளம் ஆராச்சிக்கட்டில் உள்ள அவரது இல்லத்தில் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பெருந்தொகையான மக்கள் திரண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொரளை ஜயரத்ன மல்சாலையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வீதியின் இருமருங்கிலும் பெருந்தொகையான மக்கள் திரண்டு இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது,
சனத் நிஷாந்தவின் இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 7 times, 1 visits today)





