சிங்கப்பூரில் பணத்திற்காக வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்தவருக்கு நேர்ந்த கதி
சிங்கப்பூரில் வெளிநாட்டு பெண்ணை பணத்திற்காக திருமணம் செய்துகொண்ட நபருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மதுபான கூடத்தில் சந்தித்த ஜேன் என்ற அந்த பெண்ணை S$3,000 பணத்துக்காக திருமணம் செய்துகொண்டார். அதை கொண்டு தனது கடனை அடைத்து விடலாம் என்றும், தனது முதல் திருமணத்தில் பெற்ற குழந்தைகளைப் பராமரிக்கலாம் எனவும் அவர் எண்ணியுள்ளார்.
ஜேன், நீண்ட கால பயண அனுமதியைப் பெற சிங்கப்பூர் நபரை திருமணம் செய்துகொள்ள இருந்தார், இதனால் இருவருக்கும் இணக்கப்பாடு ஏற்பட்டது.
இந்நிலையில், 33 வயதான முகம்மது பவுசி கஹிர் என்ற அந்த நபருக்கு நேற்று ஆறு மாத சிறைத்தண்டனையும் S$3,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
அபராதத்தை செலுத்த முடியாவிட்டால், கூடுதலாக 10 நாட்கள் சிறைத்தண்டனை அவர் அனுபவிக்க வேண்டும். இந்த திருமணம் கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்ததாக கூறப்பட்டுள்ளது. அதே ஆண்டு நவம்பரில் அவர் கைதானார்.
அந்த பெண் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.