உலகம்

மாலியில் இடிந்து விழுந்த தங்கச் சுரங்கம் – 73 பேர் பலி – உயிருக்கு போராடும் பலர்

மாலி நாட்டில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 73 பேர் உயிரிழந்துள்ளனர்.

200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டுள்ள நிலையில் அவர்களில் இதுவரை 73 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

மாலி நாட்டில் தென்மேற்கு கோலிகோரோ பகுதியில் உள்ள கங்காபா மாவட்டத்தில் தங்க சுரங்கம் உள்ளது. இந்த சுரங்கத்தில் நேற்று முன் தினம் இரவு 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்தனர்.

இந்நிலையில் திடீரென சுரங்கம் இடிந்து விழுந்தது. இதில் சுரங்கத்துக்குள் பணிபுரிந்த அனைவருமே மண்ணில் புதைந்துள்ளதாக தகவல் வெளியானது.

இதையடுத்து உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். அந்த நாட்டு அரசின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 73-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்காவின் மூன்றாவது பெரிய தங்க உற்பத்தி நாடாக விளங்கும் மாலியில் இத்தகைய விபத்துகள் அடிக்கடி ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது.

ஆனாலும், சுரங்கப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்டவை இன்னும் மேம்படுத்தப்படவில்லை. அங்கு பணிபுரியும் தொழிலாளர்களின் உயிர்கள் துச்சமாகவே மதிக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்கின்றன.

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!