புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளான கார் – நால்வர் வைத்தியசாலையில் அனுமதி

கார் ஒன்று புகையிரதத்துடன் மோதியதில் இன்று (17) மாலை விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
விபத்தில் கார் பலத்த சேதமடைந்துள்ளதாகவும், காரில் பயணித்த 4 பேர் ஆபத்தான நிலையில் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
காரில் ஒரு தம்பதியுடன் தாய் மற்றும் மகள் இருந்துள்ளனர்.திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தவர்களே குறித்த விபத்தில் சிக்கியுள்ளனர்.இவர்கள் அனைவரும் கம்பஹா பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த புகையிரதம் கட்டுநாயக்கவிற்கு எரிபொருள் ஏற்றிச் செல்லும் புகையிரதம் என தெரிவிக்கப்படுகிறது.ஜா எல, குடஹாகபொல புகையிரத நிலையத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
(Visited 14 times, 1 visits today)