தாய்லாந்தில் வெடிவிபத்து : 18 பேர் உயிரிழப்பு!

மத்திய தாய்லாந்தில் உள்ள பட்டாசு ஆலையில் புதன்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 18 பேர் உயிரிழந்ததாக மீட்புப் பணியாளர் ஒருவர் தெரிவித்தார்.
முன்னதாக 20 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 18 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கையை இன்னும் சரிபார்த்து வருவதாக AFP அதிகாரிகள் தெரிவித்தனர்.
“இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன, எத்தனை பேர் இறந்தனர் என்பதை நாங்கள் சரிபார்க்கிறோம்,” என்று போலீஸ் கர்னல் தீரபோஜ் ரவாங்பன் AFP இடம் கூறினார்.
வெடிவிபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து எதுவும் தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன், இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
(Visited 10 times, 1 visits today)