அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு புதிய இராணுவக் கோட்பாட்டை முன்வைக்கும் பெலாரஸ்
அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு முதன்முறையாக ஒரு புதிய இராணுவக் கோட்பாடு பெலாரஸால் முன்வைக்கப்படும் என்று அதன் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
“எங்கள் பிரதேசத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள தந்திரோபாய அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்த பெலாரஸின் கருத்துக்களை நாங்கள் தெளிவாகத் தெரிவிக்கிறோம்” என்று பாதுகாப்பு அமைச்சர் விக்டர் க்ரெனின் பெலாரஸின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கூறியுள்ளார்.
ரஷ்யா கடந்த ஆண்டு தந்திரோபாய அணு ஆயுதங்களை பெலாரஸில் நிலைநிறுத்த அனுப்பியது, இருப்பினும் எத்தனை என்பது பற்றிய விவரங்கள் இல்லை.
பெலாரஸின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் விக்டர் க்ரெனின் கூறுகையில், “எங்கள் பிரதேசத்தில் நிறுத்தப்பட்டுள்ள தந்திரோபாய அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்த பெலாரஸின் கருத்துக்களை நாங்கள் தெளிவாகத் தெரிவிக்கிறோம். “ஒரு புதிய அத்தியாயம் தோன்றியுள்ளது, அங்கு எங்கள் கூட்டாளிகளுக்கான எங்கள் நட்பு கடமைகளை நாங்கள் தெளிவாக வரையறுக்கிறோம்.” என்றார்
பாராளுமன்றத்திற்கு இணையாக பெலாரஸில் செயல்படும் பிரதிநிதித்துவ அமைப்பான அனைத்து பெலாரஷ்ய மக்கள் சபையின் ஒப்புதலுக்காக இந்த கோட்பாடு சமர்ப்பிக்கப்பட உள்ளது.