அறிவியல் & தொழில்நுட்பம்

புதிய வசதிகளை அறிமுகம் செய்துள்ள WhatsApp!

WhatsApp ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. அந்தவகையில் பயனர்களின் வசதிக்கேற்ப பல புதிய வசதிகளை அறிமுகம் செய்துகொண்டே வருகின்றது. அந்தவகையில் தற்பொழுது Synchronized எனப்படும் Audio, Video அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய வசதியொன்றை அறிமுகம் செய்யவுள்ளது.

அதாவது, நீங்கள் Video Callஇல் இருக்கும்பொழுதே மற்றவருடன் Audio Music , Video உள்ளிட்டவைகளைப் பகிர்ந்து Synchronized அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். Video Callஇல் இருக்கும்பொழுதே ஒரு நபர் Screen Share செய்தால் அவர் Audio ஏதேனும் Playசெய்தால் அதை மற்றவர்களிடத்திலும் பகிர்ந்துகொள்ள முடியும்.

இந்த வசதி one-on-one அழைப்புகளுக்கு மாத்திரம் இல்லை, Group Callஇலும் இதை பயன்படுத்திக்கொள்ள முடியும். இன்னுமொரு சிறப்பம்சமாக இருவர் அல்லது குழுவாக ஒன்றாக சேர்ந்து Videoக்களை பார்க்க முடியும். இதன்பொழுது Video Callஇன் பொழுது shared Audio பயன்படுத்திக்கொள்ள முடியும். பயனர்கள் தங்கள் Video Playback அனுபவங்களை synchronized செய்யலாம். இது மெய்நிகர் திரைப்படம் பார்க்கும் வசதி மற்றும் Content பகிர்வு செயல்களில் மிகவும் வசதியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த வசதி தற்பொழுது சோதனை அடிப்படையில் Beta பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. விரைவில் அனைவரது பயன்பாட்டிற்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்