சிங்கப்பூரில் நபர் ஒருவருக்கு உதவிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி
சிங்கப்பூரில் பொலிஸாரின் ஆலோசனை பெற்ற பிறகும் தொடர்ந்து மோசடி நபருக்கு உதவிய பெண்ணுக்கு 9 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தமக்குச் சொந்தமான 30,000 வெள்ளியை அவர் மோசடிக்காரரரிடம் ஏற்கனவே கொடுத்திருக்கிறார்.
58 வயது ஹெலன் சியாங்கின் பெயரில் இருக்கும் வெவ்வேறு வங்கிக் கணக்குகள் குறித்து 9 பொலிஸார் புகார்கள் பதிவான பின் 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் திகதி அவர் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டார்.
2022 மே முதல் செப்டம்பர் வரை இணையத்தில் தாம் சந்தித்த கீத் டேவிட் எனும் நபருக்காக மின்னிலக்க நாணயக் கட்டண முறையைப் பயன்படுத்தியதாக அவர் அப்போது ஒப்புக்கொண்டார்.
அவருடைய வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்பட்ட பணம் மோசடிக்கானது என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டது. சியாங் பொலிஸார் ஆலோசனைக் குறிப்பில் கையெழுத்திட்டார். ஆனால் அதற்குப் பிறகும் அவர் டேவிட்டுடன் தொடர்பில் இருந்திருக்கிறார்.
விளம்பரம்
பிறகு இணையக் காதல் மோசடிக்கு ஆளாகியிருக்கக் கூடுமென நம்பப்படும் லீ முய் செங்கிடமிருந்து பணத்தைப் பெறும்படி சியாங்கிடம் டேவிட் கூறியிருக்கிறார்.
சியாங் லீயிடம் 4 முறை பணத்தை வாங்கி டேவிட் சொன்ன வங்கிக் கணக்கில் பணத்தைப் போட்டிருக்கிறார். லீ தாம் மோசடிக்கு ஆளானதாகக் கருதி சியாங் மீது புகாரளித்தார்.